ஓடிடியில் வெளியாகும் ''லெவன்'' நடிகரின் புதிய படம்

இந்த ஆண்டின் ஐந்தாவது நவீன் சந்திராவின் திரைப்படமாக ஷோ டைம் வெளியாகி இருக்கிறது.;

Update:2025-07-20 17:57 IST

சென்னை,

லெவன் பட நடிகர் நவீன் சந்திரா நடித்துள்ள ''ஷோ டைம்'' படம் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த திரில்லர் திரைப்படம் வருகிற 25-ம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது. மதன் தட்சிணாமூர்த்தி இயக்கிய ''ஷோ டைம்'' தமிழ் திரைப்படமான நூடுல்ஸின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

கேம் சேஞ்சர், 28 டிகிரி செல்சியஸ், பிளைண்ட் ஸ்பாட் மற்றும் லெவன் ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த ஆண்டின் ஐந்தாவது நவீன் சந்திராவின் திரைப்படமாக ''ஷோ டைம்'' வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்