ஓடிடிக்கு வரும் ஆனந்தியின் 'பிரேமண்டே' - எதில், எப்போது பார்க்கலாம்?
இந்த காதல் - நகைச்சுவை படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.;
சென்னை,
நடிகை ஆனந்தி நடித்த 'பிரேமண்டே' திரைப்படம் ஓடிடிக்கு வந்துள்ளது. நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ஜான்வி நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்த இந்த காதல் - நகைச்சுவை படம் கடந்த மாதம் 21-ம் தேதி வெளியானது.
திரையரங்குகளில் கலையான விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 19-ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.