ரூ.100 கோடி பட்ஜெட்...ரூ.12 கோடி வசூல்...ஓடிடியில் டிரெண்டாகும் படுதோல்வி படம் - எதில் பார்க்கலாம்?
நட்சத்திர ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் நடித்திருந்தபோதிலும், பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை.;
சென்னை,
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சில படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்துள்ளன என்பது தெரிந்ததே. சமீபத்திய ஆண்டுகளில், பல பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்துள்ளன.
அதே வேளையில் திரையரங்குகளில் சிறப்பாக செயல்படாத படங்கள் ஓடிடியில் வரவேற்பை பெறுகின்றன. இப்போது அப்படிப்பட்ட ஒரு படத்தைப் பற்றிதான் பார்க்கப்போகிறோம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெறவில்லை. நட்சத்திர ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் நடித்திருந்தபோதிலும், பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை.
இந்தப் படத்தின் பெயர் “ஆரோன் மெய்ன் கஹான் தும் தா”. இந்த படத்தில் பாலிவுட் ஹீரோக்கள் அஜய் தேவ்கன், தபு, ஜிம்மி ஷெர்கில், சாயி மஞ்ச்ரேக்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.12.91 கோடி மட்டுமே வசூலித்தது.
இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு திரையரங்குகளில் ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும், ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டிரெண்டிங்கில் உள்ளது. ஆரோன் மே கஹான் தும் தா” படம் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.