ஓடிடியில் ராசி கன்னா - ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த ’தெலுசு கடா’...எப்போது, எதில் பார்க்கலாம்?

இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றது;

Update:2025-11-09 15:01 IST

சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் ’தெலுசு கடா’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தை பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. நெட்பிளிக்ஸ், அதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 14-ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கிறது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றது, தற்போது ஓடிடியில் பார்வையாளர்களை ஈர்க்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்