ஓடிடியில் வெளியாகும் ’தி பென்டாஸ்டிக் போர்’: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்...எப்போது, எதில் தெரியுமா?
பென்டாஸ்டிக் போர் படம் பாக்ஸ் ஆபீஸிலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.;
சென்னை,
மார்வெல் ஸ்டுடியோஸுக்கு 2025 ஒரு பெரிய ஆண்டாக அமைந்துள்ளதது. கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட், தண்டர்போல்ட்ஸ் மற்றும் தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வந்தன.
முதல் இரண்டும் பார்வையாளர்களை பிடிக்கத் தவறிய போதிலும், பென்டாஸ்டிக் போர் பாக்ஸ் ஆபீஸிலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
உலகளவில் அரை பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்த தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் இப்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த படம் நவம்பர் 5 முதல் தமிழ் ,ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
மாட் ஷக்மேன் இயக்கிய இப்படத்தில் பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, எபோன் மோஸ்-பக்ராச், ஜோசப் க்வின் மற்றும் ஜூலியா கார்னர் ஆகியோர் நடித்துள்ளனர்.