உலக நன்மை வேண்டி.. வண்டுவாஞ்சேரியில் 1008 திருவிளக்கு பூஜை

விளக்கு பூஜையையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.;

Update:2025-08-25 17:47 IST

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் கோவிலின் எதிர்புறத்தில் திருவிளக்கு பூஜை தொடங்கியது. 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். விளக்கு பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்