ஆரணி சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோவிலில் அபிராமி பூஜை

சிறப்பு பூஜையில் ஆரணி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update:2026-01-19 15:27 IST

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஸ்ரீசிவகாமவல்லி- சம்பங்கி பிச்சாலீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு அபிராமி பூஜை நடைபெற்றது.

இதையொட்டி சிவகாமவல்லி அம்மனுக்கு ஆபிராமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், ஆபிராமி அந்தாதி பாராயணமும், சுவாமி உள்புறப்பாடும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் ஆரணி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்