முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தேர் பவனி

மலையாள திருப்பலியைத் தொடர்ந்து புனித ஆரோக்கிய அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.;

Update:2025-09-15 16:00 IST

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை நகரில் உள்ள பிரசித்தி பெற்ற முன் சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய குடும்ப திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் விழா நிறைவு திருப்பலி நடைபெற்றது. குழித்துறை மறைமாவட்ட ஆயர்-ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமை தாங்கி அருள்உரை வழங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

காலை 11.00 மணி அளவில் மலையாள திருப்பலியும், அதனைத் தொடர்ந்து அன்னையின் அலங்கார தேர் பவனியும் நடைபெற்றது. பக்தர்கள் அன்னையை வாழ்த்தி முழக்கமிட்டபடி தேர் இழுத்தனர். ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர், புதுக்கடை, கைச்சூண்டி, அனந்தமங்கலம், ஸ்ரீ நாராயண குரு நகர், ஸ்ரீ அம்பாள் நகர், வடக்கு தெரு மற்றும் ஆர்சி தெரு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலிக்கு பின் திருக்கொடி இறக்கம் நடைபெற்றது.. 

Tags:    

மேலும் செய்திகள்