அம்மன் கோவில்களில் நவராத்திரி வழிபாடு

நவராத்திரி மூன்றாவது நாளை முன்னிட்டு குந்தாணிபாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;

Update:2025-09-25 14:29 IST

சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன்

கரூர் மாவட்டம் குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி 3-ஆம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கா தேவி அம்மன் கோவில், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பல்வேறு அம்மன் கோவில்களில் நவராத்திரி 3-வது நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்