திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாத சிறப்பு உற்சவங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 30-ம் தேதி வைகுண்ட துவார தரிசனம் ஆரம்பம்.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் மற்றும் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன. இது குறித்த தகவல்களையும், அட்டவணைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் (டிசம்பர் 2025) எந்தெந்த தேதிகளில் என்னென்ன உற்சவங்கள் நடைபெற உள்ளன என்பது தொடர்பான அட்டவணையை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
டிசம்பர் 2 - சக்கர தீர்த்த முக்கொடி.
டிசம்பர் 4 - ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம், திருமங்கை ஆழ்வார் சாத்துமோரை
டிசம்பர் 5 - திருப்பாணாழ்வார் திருநட்சத்திர விழா
டிசம்பர் 16 - தனுர்மாசம் ஆரம்பம்.
டிசம்பர் 19 - தொண்டரடிப்பொடியாழ்வார் திருநட்சத்திர விழா; ஏழுமலையான் கோவிலில் அத்யாயனோத்ஸவம் ஆரம்பம்.
டிசம்பர் 29 - ஏழுமலையான் கோவிலில் சின்ன சாத்துமோரை.
டிசம்பர் 30 - வைகுண்ட ஏகாதசி; ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் ஆரம்பம்; தங்கத் தேரோட்டம்
டிசம்பர் 31 - வைகுண்ட துவாதசி; புஷ்கரணியில் சக்கர ஸ்நானம்.
அடுத்த மாதம் திருப்பதி செல்ல திட்டமிட்டிருக்கும் பக்தர்கள், திருப்பதியில் நடைபெற உள்ள இந்த உற்சவங்கள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப தங்களின் பயண திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்.