திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2025-09-04 15:58 IST

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலின் இணைக் கோவிலான பெரியநாயகி அம்மன் உடனுறை கபர்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் உள்ளது. வெள்ளைப் பிள்ளையார், பெரியநாயகி உடனுறை கபர்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் தனிச்சன்னதியில் எழுந்தருளி உள்ளனர்.

மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு, கடந்த 1ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது.

ஹோமங்கள், யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து இன்று காலையில் மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து 10 மணிக்கு ராஜகோபுரம் முதலான அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கபர்தீஸ்வர ஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகள் அனைவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று, பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்