திருச்செந்தூர் ஆவணித் திருவிழா- குமரவிடங்கபெருமானுக்கு மகா தீபாராதனை

சுவாமி குமரவிடங்கப்பெருமான் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளியதும் அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.;

Update:2025-08-20 10:44 IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

திருவிழாவின் 6-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சிவன் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி-தெய்வானை, சுவாமி ஜெயந்திநாதர் ஆகியோர் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளியம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு கொடுத்தனர். இதில் ஏராளமானோர் கொண்டு தேர் இழுத்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்