வைகாசி மாத பூஜை.. சபரிமலை கோவில் இன்று நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.;

Update:2025-05-14 05:33 IST

திருவனந்தபுரம்,

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து மாலையணிந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கார்த்திகை மாதம் தான் அதிக பக்தர்கள் சென்று திரும்புவார்கள் என்ற போதிலும் மற்ற காலங்களிலும் அங்குக் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று(புதன்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.

இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 5 நாட்கள் வைகாசி மாத பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

ஜனாதிபதியின் சபரிமலை வருகை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 18, 19-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்