சங்கரநாராயண சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா- அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பிரதான தெயவங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2025-09-10 18:28 IST

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை மங்கள இசை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், அனுக்ஞை, கணபதி ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி ஸ்ரீசௌபாக்ய விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை மங்கள இசை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், தேவதாஅனுக்ஞை, முதல் கால யாகபூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.

இன்று காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை மங்கள இசை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து வருஷாபிஷேகம் நடைபெற்றது. சித்திவிநாயகர், சங்கர லிங்க சுவாமி, சங்கர நாராயணசுவாமி, கோமதி அம்பாள் மற்றும் சண்முகர் ஆகியோருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

வருஷாபிஷேக விழாவில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சங்கரன்கோவில் கோயில் துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முப்பிடாதி, முத்துலட்சுமி, ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சின்னச்சாமி, வக்கீல் அன்புச்செல்வன், கோமதி அம்பாள் மாதர் சங்க அமைப்பாளர் பட்ட முத்து, ரமேஷ், வேல்முருகன், வீராச்சாமி, மாரிக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்