கனரா வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 394 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.;

Update:2025-09-27 13:45 IST

சென்னை,

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: கனரா வங்கி

பணி இடங்கள்: 3,500 (அப்ரண்டீஸ் பயிற்சி பணி). தமிழ்நாட்டில் 394 இடங்கள்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

கல்வி தகுதி: 1-9-2025 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. 1-1-2022-க்கு முன்போ, 1-9-2025-க்கு பின்போ பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்கக்கூடாது.

Advertising
Advertising

வயது: 1-9-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. 1-9-1997-க்கு முன்போ, 1-9-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

உதவித்தொகை: மாதம் ரூ.15,000

தேர்வு முறை: உள்ளூர் மொழி அறிவு திறன் தேர்வு, ஷார்ட்லிஸ்ட்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2025

இணையதள முகவரி: https://canarabank.bank.in/pages/Engagement-of-Graduate-Apprentice-in-Canara-Bank-under-Apprenticeship

Tags:    

மேலும் செய்திகள்