சென்னை ஐ.ஐ.டி.யில் புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்

மின்சார வாகனங்களின் எம்.டெக் மாணவர் சேர்க்கை ‘கேட்' நுழைவுத் தேர்வின் அடிப்படையிலும் நடத்தப்படும் என சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.;

Update:2025-05-26 23:23 IST

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டு பி.எஸ். வேதியியல் மற்றும் மின்சார வாகனங்கள் பாடத்தில் எம்.டெக் படிப்பும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

இதில், பி.எஸ். வேதியியல் படிப்பு ஐ.ஐ.எஸ்.இ.ஆர் திறனறித் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மின்சார வாகனங்களின் எம்.டெக் மாணவர் சேர்க்கை 'கேட்' நுழைவுத் தேர்வின் அடிப்படையிலும் நடத்தப்படும் என சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.

அதேபோல், பி.டெக் கணக்கீட்டு என்ஜினீயரிங் மற்றும் இயக்கவியல், பி.டெக் கணக்கீடுகள் மற்றும் உயிரி மருத்துவ என்ஜினீயரிங் ஆகிய புதிய படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. தொழில்துறை, கல்வித்துறை ஆகியவற்றின் தேவைகளையும், மாணவர்களின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு இந்த பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐ.ஐ.டி. டீன் பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்