தேர்வர்களின் முக அடையாளம் சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பம்- யு.பி.எஸ்.சி. அறிமுகம்

போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களின் அடையாளங்களை சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தை யு.பி.எஸ்.சி. அறிமுகம் செய்துள்ளது.;

Update:2025-09-20 07:19 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான போட்டித்தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்துகிறது.இந்த தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களின் அடையாளங்களை குறிப்பாக முக அடையாளத்தை உறுதிப்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையிலான தொழில்நுட்பத்ைத யு.பி.எஸ்.சி. தற்போது அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக கடந்த 14-ந்தேதி நடத்தப்பட்ட தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமி மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வுகளில் பங்கேற்ற தேர்வர்களுக்கான அடையாளங்களை இந்த ஏ.ஐ. அடிப்படையிலான தொழில்நுட்பம் மூலம் சரிபார்க்கப்பட்டு உள்ளது.

அரியானாவின் குருகிராமில் உள்ள குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் இந்த தொழில்நுட்பம் மூலம் தேர்வர்களின் புகைப்படங்கள் டிஜிட்டல் முறையில் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டதாக யு.பி.எஸ்.சி. தலைவர் குமார் கூறியுள்ளார்.இந்த புதிய நடைமுறை மூலம் ஒவ்வொரு தேர்வருக்கான அடையாளம் சரிபார்ப்பு நேரம் வெறும் 8 முதல் 10 நொடிகளாக குறைந்திருப்பதாக கூறிய அவர், இது பாதுகாப்பில் கூடுதல் அடுக்கை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

தேர்வுகளின் கண்ணியத்தை வலுப்படுத்தும் நோக்கிலும், தேர்வு மையங்களில் தேர்வர்களின் நுழைவு அனுபவங்களை மேம்படுத்தும் வகையிலும் தேசிய இ-நிர்வாக மண்டலத்துடன் சேர்ந்து இந்த ஏ.ஐ. அடிப்படையிலான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.விரைவாகவும், மிகச்சரியாகவும் செயல்படும் இந்த முக அடையாள சரிபார்ப்பு திட்டத்தை சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட இனிவரும் அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படுத்த யு.பி.எஸ்.சி. திட்டமிட்டு உள்ளது.இந்த பணிகளுக்காக வை-பை உள்ளிட்ட தளவாடங்கள், ஊழியர்களுக்கான பயிற்சி போன்றவை முக்கியமானவை ஆகும். இதற்காக தேவையான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த தேர்வில் ஏ.ஐ. அடிப்படையிலான தொழில்நுட்பம் மூலம் 1,129 தேர்வர்களுக்கு சுமார் 2,700 வெற்றிகரமான ஸ்கேனிங் செய்யப்பட்டது.இந்த வெற்றிகரமான சோதனை, புத்திசாலித்தனமான, மிகவும் பாதுகாப்பான மற்றும் திறமையான தேர்வுகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது.

இவ்வாறு குமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்