யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
மொத்தம் 979 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.;
Image Courtesy : PTI
புதுடெல்லி,
மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. மொத்தம் 979 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில், யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் upsc.gov.in அல்லது upsconline.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.