ரெயில் மோதி 13 மாடுகள் பலி - கேரளாவில் அதிர்ச்சி

பாலக்காட்டின் மீன்கரா அணை அருகே இன்று சென்னை - பாலக்காடு ரெயில் சென்றது.;

Update:2025-04-12 14:16 IST

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காட்டின் மீன்கரா அணை அருகே இன்று சென்னை - பாலக்காடு ரெயில் சென்றது. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில மாடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்றது.

அந்த சமயத்தில் வேகமாக வந்த ரெயில் மாடுகள் மீது மோதியது. இதில், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே 13 மாடுகள் உயிரிழந்தன.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மாடுகளின் உடல்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். அந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்