புதுச்சேரியில் வாரத்திற்கு 14 விமான சேவைகள் - இண்டிகோ நிறுவனம் தகவல்

மேம்படுத்தப்பட்ட விமான இணைப்பு பல துறைகளில் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.;

Update:2026-01-03 15:49 IST

சென்னை,

புதுச்சேரியில் வாரத்திற்கு 14 விமானங்களை இயக்குவதன் மூலம் அதன் பிராந்திய இணைப்பு மேம்படுத்தப்பட்டு, சேவைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேம்படுத்தப்பட்ட விமான இணைப்பு பல துறைகளில் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கான மேம்பட்ட பயண தொடர்பு, புதுச்சேரி மக்களுக்கு சிறப்பான மருத்துவம் மற்றும் உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது என இண்டிகோ தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இண்டிகோ நிறுவனம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி தனது சேவையை தொடங்கியது. டிசம்பர் 2025 நிலவரப்படி, புதுச்சேரியில் இருந்து வாரத்திற்கு 14 விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்குகிறது. இதன் மூலம் புதுச்சேரியில் இருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்குமான பயண சேவை வலுப்படுத்தப்பட்டுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்