பாலியல் துன்புறுத்தல், கொடூர ராகிங்கில் கல்லூரி மாணவி பலி; வழக்கில் பேராசிரியருக்கு ஜாமீன்

பேராசிரியர் அசோக் குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது செசன்ஸ் கோர்ட்டில் இன்று விசாரணை நடந்தது.;

Update:2026-01-03 21:57 IST

தரம்சாலா,

இமாசல பிரதேசத்தின் தரம்சாலா நகரில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவி ஒருவருக்கு கொடூர ராகிங் நடந்துள்ளது. இதில், கடுமையாக பாதிக்கப்பட்டு லூதியானா நகரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் கடந்த டிசம்பர் 26-ல் பலியானார்.

இதுபற்றி அவருடைய தந்தை அளித்த புகாரில், 3 மாணவிகள் அவரை தாக்கி, மிரட்டியதுடன், பேராசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலையும் மோசமடைந்தது.

இதன்பின் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரத்தில், பல்கலைக்கழக மானிய குழு தீவிர கவனம் கொண்டுள்ளது. தானாக முன்வந்து வழக்கு ஒன்றையும் பதிவு செய்தது. போலீஸ் விசாரணையும் நடந்து வருகிறது. இதேபோன்று உயர்கல்வியின் உண்மை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டு, அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள பேராசிரியர் அசோக் குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது செசன்ஸ் கோர்ட்டில் இன்று விசாரணை நடந்தது

அப்போது அவருக்கு ரூ.25 ஆயிரம் தனிநபருக்கான பிணை தொகையை செலுத்தும்படி உத்தரவிட்டு, இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்