சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் தோன்றிய ஆண்டின் முதல் சூப்பர்மூன் நிகழ்வு
சராசரியான பவுர்ணமி நிலவை விட 30 சதவீதம் பிரகாசத்துடன் நிலவு தோன்றும்.;
சென்னை,
பவுர்ணமி தினத்தில் நிலவானது முழு வெளிச்சத்துடன், பிரகாசத்துடன் தோன்றும். இது வழக்கம்போல் நடைபெற கூடிய நிகழ்வு. இதில் சூப்பர்மூன் என்றொரு நிகழவும் அவ்வப்போது நடைபெறும்.
அப்போது, பவுர்ணமி நிலவானது வழக்கத்திற்கு மாறாக மிக பெரிய அளவில் காணப்படும். பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைவாக இருக்கும்போது நிலவின் அளவு சற்று பெரிதாக தோன்றும்.
இதன்படி தமிழகத்தின் சென்னையில், மேற்கு வங்காளத்தின் பீர்பும் உள்ளிட்ட நகரங்களில் இந்த அரிய வானியல் நிகழ்வானது இன்று ஏற்பட்டது. அப்போது, சராசரியான பவுர்ணமி நிலவை விட 30 சதவீதம் பிரகாசத்துடன் நிலவு தோன்றும்.