காஷ்மீர்: ரோந்து பணியின்போது ராணுவ வீரர்கள் மாயம் - தேடுதல் பணி தீவிரம்
ராணுவ வீரர்களை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.;
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நங் கிராமத்தில் உள்ள கொடல் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன் தினம் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ராணுவ வீரர்கள் 2 பேர் ரோந்து குழுவில் இருந்து பிரிந்து சென்றனர். வெகுநேரமாகியும் குறிப்பிட்ட இடத்திற்கு ராணுவ வீரர்கள் இருவரும் திரும்பி வராததால் தேடுதல் பணி தொடங்கியது.
கடந்த 2 நாட்களாக தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பனிப்பொழிவு, மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மாயமான ராணுவ வீரர்கள் 2 பேரையும், பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.