பஞ்சாப் மாநிலத்தில் 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
பஞ்சாப்பில் 2 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீசார் மீட்டனர்.;
கோப்புப்படம்
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கக்கர் கிராமத்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை கண்டுபிடித்தனர்.
அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 கிலோ எடையுள்ள ஹெராயின் மற்றும் 900 கிராம் எடையுள்ள மற்றொரு போதைப்பொருளையும் போலீசார் மீட்டனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமந்தீப் சிங்கைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.