ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்;

Update:2025-09-01 04:00 IST

ராஞ்சி,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இதன் காரணமாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேபோல், கைது நடவடிக்கையையும் பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் சரண்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்