புனேவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து... நடுவில் சிக்கிய கார் - 8 பேர் உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.;
மும்பை,
மராட்டிய மாநிலம் புனேவின் நவாலே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று 2 லாரிகள் மற்றும் ஒரு கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அந்த 2 லாரிகளுக்கு நடுவே கார் சிக்கிக் கொண்டது. விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் லாரி மற்றும் காரில் இருந்தவர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.