லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு
இன்று காலை 10.32 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.;
File image
ஸ்ரீநகர்,
லடாக்கில் உள்ள லே பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லே பகுதியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.25 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 78.64 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.