இமாச்சல பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி, ஒருவர் காயம்.

விபத்தில் சிக்கி பலியானவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-06-01 15:01 IST

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 6 பேர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று கட்டோலா அருகே ஐஐடி-மண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தது.

அப்போது வாகனம் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதற்கட்ட தகவல்களின்படி, கட்டோலா மலைப்பாங்கான பகுதிக்கு அருகே ஒரு கூர்மையான திருப்பத்தை டிரைவர் சமாளிக்கத் தவறியதே மரண விபத்திற்கு வழிவகுத்ததாக தெரியவந்தது.

இறந்தவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணத்தை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்