கர்நாடகாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் பலி
இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.;
கோப்புப்படம்
பெங்களுரு,
கர்நாடகாவில் உள்ள மனகுலி கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனைத் தாண்டி மும்பையிலிருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக மற்றொரு காரும் சிக்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு இறந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.