மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.;

Update:2025-05-18 03:19 IST

இம்பால்,

மணிப்பூரில் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. 2 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த வன்முறையில் அங்கு பொது அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் முதல்-மந்திரி பைரன் சிங் பதவி விலகினார். அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவுபால், கக்சிங், பிஷ்னுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் தோட்டாக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்