பீகாரில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து
ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.;
பாட்னா,
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நேற்று நேற்று இரவு 11.25 மணியளவில் கிழக்கு ரெயில்வேயின் ஆசன்சோல் கோட்டத்திற்கு உட்பட்ட லஹாபோன் மற்றும் சிமுல்தலா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
சரக்கு ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக ஹவுரா-பாட்னா-டெல்லி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனை தொடர்ந்து ஆசன்சோல், மதுபூர் மற்றும் ஜாஜா நிலையங்களில் இருந்து விபத்து நிவாரண ரெயில்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.