ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தவர் மர்மச்சாவு

தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-10-26 02:09 IST

ஜெய்ப்பூர்,

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த ரோஷன் குமார் பத்ரோ (வயது 24) என்ற வாலிபர், ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.

நேற்று மதியம் அவர் சாப்பிட வராததால், அதே விடுதியில் தங்கியிருந்த ரோஷனின் உறவுக்கார மாணவர் ஒருவர் ரோஷனின் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து விடுதி வார்டனுடன் சேர்ந்து அறையை திறந்து பார்த்தபோது படுக்கையில் ரோஷன் மயங்கி கிடந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கே பரிசோதித்த டாக்டர்கள், ரோஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கான காரணம் தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்தவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்