கலவரத்துக்கு பின் முதல் முறையாக.. இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

மணிப்பூரில் ரூ.8,500 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்;

Update:2025-09-13 01:25 IST

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களுல் ஒன்றான மணிப்பூரில் வசிக்கும் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடந்த 2023-ம் ஆண்டு இனக்கலவரமாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எந்த கருத்தும் கூறவில்லை. மணிப்பூருக்கும் செல்லவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். அதே நேரம் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விரிவாக பேசினார்.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி, இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் காங்லா கோட்டைக்கு செல்கிறார்.

அங்கு அவர் ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.1,200 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் பேசுகிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அந்த மாநில பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரதமர் செல்லும் பாதை முழுவதும் வரவேற்பு தோரணங்களையும், பதாகைகளையும் வைத்துள்ளனர். மாநில பா.ஜனதா கட்சி அலுவலகம் அருகே 20 அடி நீளத்துக்கு பிரதமர் மோடியை வரவேற்று பதாகை ஒன்றை வைத்துள்ளனர்.

இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பிரதமர் அங்கு செல்வதையொட்டி இம்பால் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்