ஸ்ரீநகர் - தொடர் பனிப்பொழிவு...விமான சேவை முழுமையாக ரத்து
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.;
ஸ்ரீநகர்,
மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக காஷ்மீருக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அப்டேட்டுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய வானிலை நிலை இன்று மாலை வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.