பிரதமர் மோடி நாளை கேரளா பயணம் - வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

திருவனந்தபுரத்தில் அதிநவீன கதிரியக்க அறுவை சிகிச்சை மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.;

Update:2026-01-22 18:12 IST

திருவனந்தபுரம்,

பிரதமர் நரேந்திர மோடி நாளை(வெள்ளிக்கிழமை) கேரளாவுக்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, 3 அம்ரித் பாரத் ரெயில்கள் உள்பட 4 புதிய ரெயில்களின் சேவைகளை கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார்.

குறிப்பாக தெருவோர வியாபாரிகளுக்கான நிதி உள்ளடக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ‘பிரதமர் ஸ்வநிதி கிரெடிட் கார்டு’ திட்டத்தை அவர் அறிமுகப்படுத்த உள்ளார். அதோடு, திருவனந்தபுரத்தில் ஒரு நவீன தபால் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

மேலும் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட உள்ள CSIR-NIIST தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிநவீன கதிரியக்க அறுவை சிகிச்சை மையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்