பச்சிளம் குழந்தையை ரூ. 95 ஆயிரத்திற்கு விற்பனை செய்த தாய்; 24 மணிநேரத்தில் மீட்ட போலீசார்

குழந்தை விற்பனை தொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.;

Update:2026-01-23 01:10 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டம் ஹரானா கிராமத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ் குமார். இவரது மனைவி மம்தா தேவி. இதனிடையே, மம்தா தேவிக்கு கடந்த 6 மாதங்களுக்குமுன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், மம்தா தனது பச்சிளம் ஆண் குழந்தையை நேற்று முன் தினம் ரூ. 95 ஆயிரத்திற்கு அனிதா என்ற பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளார். மகனை மனைவி விற்பனை செய்தது குறித்து மம்தாவின் கணவர் பிரிஜேஷ் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 24 மணிநேரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டனர். மேலும், குழந்தை விற்பனை தொடர்பாக மம்தா மற்றும் குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்