வெளிநாடு வாழ் இந்தியருக்கான புதிய இணையதளம்: அமித்ஷா தொடங்கி வைத்தார்
வெளிநாடு வாழ் இந்தியருக்கான இணையதள 'போர்ட்டலி'லும் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
புலம் பெயர்ந்த இந்திய குடிமக்களுக்கான சேவையை நவீனமாக்குவதற்கு மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு உள்ளது. இந்த வகையில் வெளிநாடு வாழ் இந்தியருக்கான இணையதள 'போர்ட்டலி'லும் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களை சேர்க்க வேண்டும், பழைய 'போர்ட்டலில்' உள்ள பல சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என ஓ.சி.ஐ. (வெளிநாடு வாழ் இந்தியர் குடியுரிமை அட்டை) அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று அந்த 'போர்ட்ட'லில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய 'போர்ட்டலை' மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். ஓ.சி.ஐ. அட்டை வைத்திருக்கும் இந்திய வம்சாவளியினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் விசா இல்லாமல் இந்தியாவுக்கு பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.