ஆந்திர பிரதேசம்: கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தில் கியாஸ் சிலிண்டர் வெடிவிபத்தில், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.;
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் துறைமுகம் அருகே புக்கா தெரு அருகில் வெல்டிங் பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், வெல்டிங் பணிக்காக வைக்கப்பட்டு இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில், 5 பேர் பலியானார்கள். இந்த வெடிவிபத்து அதிக சத்தத்துடனும், சக்தி வாய்ந்த ஒன்றாகவும் இருந்தது. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது.
இந்த சம்பவத்தில், பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு, கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.