கேரள விளையாட்டு ஆணைய விடுதியில் 2 தடகள வீராங்கனைகள் தூக்குப்போட்டு தற்கொலை

கேரள விளையாட்டு ஆணைய விடுதியில் 2 தடகள வீராங்கனைகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.;

Update:2026-01-16 04:21 IST

கோப்புப்படம் 

திருவனந்தபுரம்,

கேரளாவின் கொல்லத்தில் மத்திய அரசின் விளையாட்டு ஆணைய பயிற்சி மையம் உள்ளது. இங்கு கோழிக்கோட்டை சேர்ந்த சாண்ட்ரா (18 வயது), திருவனந்தபுரம் முத்தக்கலை சேர்ந்த வைஷ்ணவி (15 வயது) ஆகிய 2 தடகள வீராங்கனைகள் பயிற்சி பெற்று வந்தனர்.

விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கியிருந்த அவர்கள் நேற்று காலையில் பயிற்சிக்கு செல்லவில்லை. இதனால் சக வீராங்கனைகள் அவர்களின் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு அறையில் இரு வீராங்கனைகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்