உறவுக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை இணையத்தில் பதிவேற்றியவர் கைது

பெண்ணின் குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் பொய்யான புகார்களை கொடுத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.;

Update:2026-01-15 20:16 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண், வேலை நிமித்தமாக மற்றொரு ஊரில் தனியாக தங்கியிருந்தார். அப்போது அவரது உறவினரான 40 வயது நபர் ஒருவர் அந்த பெண்ணை சந்திக்க வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அந்த நபர், தனது உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே சொன்னால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் பொய்யான புகார்களை கொடுத்துவிடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார்.

இவ்வாறு அந்த பெண்ணை அவர் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த செயலை அவர் வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட நபரை அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்