கேரளாவில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் திருவனந்தபுரத்தில் இன்று பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.;
திருவனந்தபுரம்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழர் உள்ள உலகின் அனைத்து பகுதிகளிலும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவிலும் பொங்கல் பண்டிகை வழக்கமான குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது. கேரளாவில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட உயரதிகாரிகள் திருவனந்தபுரத்தில் இன்று பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
கேரள வருவாய்த்துறை செயலாளர் ராஜமாணிக்கத்தின் இல்லத்தில் நடந்த இந்த சேரநாட்டு பொங்கல் விழாவில் ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மலஸ்ரீ, ரஞ்சித், ஸ்ரீ லட்சுமி, போலீஸ் ஐஜிக்களான நிஷாந்தினி, அஜீதா பேகம், சதீஷ் பினோ மற்றும் உயர் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.