16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை - ஆஸ்திரேலியாவை பின்பற்ற ஆந்திர அரசு திட்டம்

ஒரு குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கூடாது என நரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-22 15:17 IST

அமராவதி,

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கான தடைச் சட்டம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவை பின்பற்றி 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிப்பதற்கு ஆந்திர அரசு திட்டமிட்டு வருகிறது.

இது குறித்து ஆந்திர மந்திரி நரா லோகேஷ் அளித்த பேட்டியில், “ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து ஆந்திர அரசு சார்பில் ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு வலுவான சட்டத்தை நாம் உருவாக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது” என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்