பொறுப்பு டிஜிபி நியமனம் - தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார்.;

Update:2025-09-01 16:17 IST

புதுடெல்லி,

தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தமிழக காவல்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, தீயணைப்பு துறை இயக்குனரகம் என்ற புதிய அமைப்பை தமிழகத்தில் முதன்முதலாக உருவாக்கி, அதன் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.. தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக, நிர்வாக பிரிவு டி.ஜி.பி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். 

 இந்த நிலையில், வெங்கட்ராமன் நியமனம் தொடர்பாக  தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்துள்ளார். மாநில டிஜிபி நியமனங்களில் பொறுப்பு என்ற பதவியை பயன்படுத்த கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டு இருப்பதாகவும், எனினும் கோர்ட்டை அவமதிக்கும் விதமாக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக நிர்வாகி அருண்ராஜ் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டில், அவமதிப்பு வழக்கு இவ்விவகாரத்தில் தாக்கலாகியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்