ராணுவ தளபதி உபேந்திர திவேதி உடல் தானம் செய்தார்

உடல் உறுப்பு தானம் என்பது மனித குலத்துக்கான சேவை என்று உபேந்திர திவேதி கூறினார்.;

Update:2025-08-22 23:10 IST

புதுடெல்லி,

புதுடெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் நடந்த உடல் உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ராணுவ தளபதி உபேந்திர திவேதியும், அவருடைய மனைவி சுனிதா திவேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து, அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். பின்னர் உபேந்திர திவேதி பேசுகையில், உடல் உறுப்பு தானம் என்பது மனித குலத்துக்கான சேவை. இதுபோன்ற தானங்களில் ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றார். ஏற்கனவே நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஒரே நாளில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ பணியாளர்கள் உடல் உறுப்புதான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்