துணை ஜனாதிபதியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.;

Update:2025-07-20 16:58 IST

புதுடெல்லி,

டெல்லியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மாநிலங்களவையின் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங்கும் உடன் சென்றார். இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து முழு விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை (ஜூலை 21) தொடங்க உள்ளநிலையில், ஜகதீப் தன்கர் - கேஜரிவால் சந்திப்பு நடைபெற்றிருப்பது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்