ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா வருகை

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வோங்.;

Update:2025-11-19 15:23 IST

டெல்லி,

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வோங். இவர் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். தனி விமானம் மூலம் பென்னி வோங் இன்று இரவு தலைநகர் டெல்லிக்கு வர உள்ளார்.

டெல்லி வரும் பென்னி வோங் நாளை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு , வர்த்தகம், சர்வதேச அரசியல் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்திய பயணத்தை முடித்துக்கொண்ட பென்னி வோங் நாளை இரவு மீண்டும் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்