மும்பை 'கேட்வே ஆப் இந்தியா' அருகே விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - மத்திய மந்திரி பங்கேற்பு
மும்பையில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நிகழ்ச்சியில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள 'கேட்வே ஆப் இந்தியா' அருகே, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சைக்கிள் ஓட்டுதலை ஊக்கப்படுத்தும் வகையில், 'பிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்' (Fit India Sundays on Cycle) என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டார். உடல் பருமனை எதிர்த்து போராடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணி, 'கேட்வே ஆப் இந்தியா' பகுதியில் இருந்து கிர்கான் வரை நடைபெற்றது. இதில் மன்சுக் மாண்டவியாவுடன் ஏராளமான மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.