எரிமலை வெடிப்பு: இந்தோனேசியா புறப்பட்ட விமானம் டெல்லியில் தரையிறக்கம்

விமான நிலையம் அருகே கடும்புகை சூழ்ந்து காணப்படுகிறது;

Update:2025-06-18 10:53 IST

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இந்நிலையில், பாலி தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. இதனால், பாலி விமான நிலையம் அருகே கடும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இது குறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், விமானம் மீண்டும் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது. பயணம் தடைபட்ட நிலையில் பயணிகளின் டிக்கெட் தொகை திருப்பி வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்