இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.;

Update:2025-08-23 18:55 IST

ஸ்ரீநகர்,  

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்கள், ராணுவ விமானங்கள் உள்ளிட்டவை இந்திய வான்பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து பலமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியா மீண்டும் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24 வரை நீட்டித்துள்ளது. அதேபோல, பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24 வரை நீட்டித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்