பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்

பெங்களூரு பல்கலை. பெயர் மாற்றத்திற்கான மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.;

Update:2025-08-20 10:22 IST

பெங்களூரு,

பெங்களூரு ஞானபாரதியில் பெங்களூரு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது பெயர், பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு சூட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.

அதன்படி பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு மன்மோகன்சிங் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்து நேற்று கர்நாடக சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்டசபையில் நிறைவேறியது. இதன் மூலம் இனி பெங்களூரு பல்கலைக்கழகம், மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்